சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு)  ஜோதிடர்

ணவன்- மனைவி இருவர் நாடியில் பலனறிய வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து "என்ன காரிய மாகப் பலனறிய வந்துள்ளீர்கள்'' என்றேன்.

"ஐயா, எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். எங்கள் நால்வரின் ஜாதகங்களையும் ஒரு பிரபலமான ஜோதிடரிடம் கொடுத்து பலன் கேட்டோம். அவர் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு  புத்திர, பித்ரு சாபம் உள்ளது. இந்த சாபத்தினால் உங்களுக்கோ அல்லது உங்கள் மகனுக்கோ ஆயுள் பாதிப்பு உண்டாகும் என்றார். 

Advertisment

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் இந்த பாதிப்பு நீங்க பரிகாரங்கள் இருந்தால் கூறுங்கள்'' என்றோம்.

இந்த பாதிப்பு நீங்க, நீங்கள் குடும்பத்துடன் இராமேஸ்வரம் சென்று திதி, தர்ப்பணம் செய்துவிட்டு, ராமநாதசுவாமிக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து விட்டு பின்பு வடநாட்டிலுள்ள "கயா'விற்குச் சென்று முன்னோர்களுக்கு மறுபடியும் திதி, தர்ப்பணம் செய்து பின்பு திரிவேணி சங்கமத்தில் நீராடி பின்பு காசிக்குச் சென்று விசுவநாதருக்கும் விசாலாட்சி தாயாருக்கும் அர்ச்சனை, அபிஷேகம் செய்து ஒன்பது பிராமணர்களுக்கு வஸ்திரமும், அன்னதானம் செய்துவர வேண்டும். 

மேலும் மகனின் 30 வயதுவரை நீங்களும் உங்கள் மகனும் பிரிந்து வாழ்ந்தால் இந்த சாப- தோஷ  பாதிப்பு தராது; நீங்கும் என்றார்ஜோதிடர் கூறியதைக் கேட்ட நாங்கள் மிரண்டுவிட்டோம். நான் பெரிய பண வசதி இல்லாதவன். இவர் கூறுவதை பார்த்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். என்ன செய்வது என்று தெரியாமல் என் நண்பன் ஒருவனிடம் என் நிலையைக் கூறினேன். அவன் "பால ஜோதிடம்' புத்தக வாசகர். வாரம் தவறாமல்  இந்த புத்தகத்தை வாங்கிப் படிப்பான். நீ ஆயிரக்
கணக்கில் பணம் செலவுசெய்து எங்கும் சென்று அலையவேண்டாம் என்று உங்கள் செல்போன் நம்பரைக் கூறி அகத்தியர் ஜீவநாடியில் பலன் கேட்டுப்பார். அகத்தியர் இதற்கு செலவில்லாத சரியான தீர்வு நிவர்த்தி சொல்வார் என்றான். அதனால்தான் உங்களை நாடிவந்தோம்'' என்றார்.

Advertisment

அந்த பிரபலமான ஜோதிடர் இந்த பித்ரு, புத்திர சாபம் உண்டான நிகழ்வுகளை யும், வம்சத்தில் யார் யாருக்கு என்ன பாவம் செய்தார்கள்? எத்தனை தலைமுறையாக வம்சத்தைத் தொடர்ந்து வருகின்றது என்று முன்னோர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் சாபத்திற்கான காரணத்தையும் கூறினாரா என்றேன்.

ஜோதிடர் அதைப்பற்றி எதுவும் கூறவில்லை. உங்களுக்கு பித்ரு, புத்திர சாபம் உள்ளது. பரிகாரங்களைச் செய்யுங்கள். நீங்களும் மகனும் பிரிந்து வாழுங்கள் என்று மட்டும் கூறினார். என் மகனைப் பிரிந்து நாங்கள் எப்படி வாழ்வது என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன் கூறினார்.

"இவன் வம்ச முன்னோர்கள் வாழ்வு நான்கு தலைமுறைக்கு முன் உண்டானது. 

இவன் முப்பாட்டான் நிறைய சொத்து சம்பாதித்து செல்வந்தனாக வாழ்ந்தான். 

அவனுக்கு இவன் பாட்டன் ஒரே மகன். தன் மகனுக்கு திருமணம் செய்துவைத்தான். இவன் பாட்டனும் அவன் மனைவியும் சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு தந்தையை 
வீட்டைவிட்டு துரத்திவிட்டான்.

இவன் முப்பாட்டன் வீட்டைவிட்டு வெளியேறி பசியும் பட்டினியுமாய் வாழ்ந்தான்.  அவனது இறுதிக்காலத்தில் சம்பாதித்த சொத்துகளை பிடுங்கிக்கொண்டு த ன்னைக் கஷ்டப்பட வைத்ததால், நான் சம்பாதித்த இந்த பெருஞ்செல்வம், சொத்துக்களை வாரிசுகள் அனுபவிக்க முடியாமல் படிப்படியாக அழிந்துபோக வேண்டும் என்று சாபமிட்டு இறந்தான்.

முப்பாட்டன் விட்ட சாபம் நான்கு தலைமுறையாக இன்றுவரை தொடர்கின்றது. இந்த சாபத்தால் தந்தை உயிருடன் இருந்தால் மகன் இறப்பான் அல்லது மகன் சம்பாதிக்க முடியாத இளம்வயதில் இருக்கும்போது பெற்ற தந்தை இறப்பான். இந்த நிகழ்வு இவன் வம்சத்தை சேர்ந்தவர்களின் வீட்டில் 
தொடர்ந்து நடந்துவருகின்றது. அதேபோன்று இவன் முப்பாட்டன் சம்பாதித்த பூர்வீக சொத்துகள் படிப்படியாக குறைந்து மூன்றாவது தலைமுறையான இவன் தகப்பன் காலத்தில் முற்றும் அழிந்தது. இவனுக்கு பூர்வீக சொத்துகள் என்று எதுவுமில்லை. இந்த சாபம் நான்காவது தலைமுறையான இவன் மகனுக்கும் தொடர்ந்துள்ளது என அகத்தியர் சொல்ல,
அகத்தியர் கூறியது உண்மைதான். எனது தகப்பனார் சிறுவனாக இருக்கும்போதே என் தந்தை இறந்து போனார். பூர்வீக சொத்துகளும் என் தகப்பனார் காலத்திலேயே முழுவதும் அழிந்து போனது. இப்போது நான் சுயமாக சம்பாதித்துதான் வாழ்ந்து வருகின்றேன். இந்த சாப பாதிப்பு நீங்க அகத்தியர்தான் வழிகாட்ட வேண்டும்'' என்றார்.

ஜோதிடர்கள் கூறும் திதி, தர்ப்பணம், அமாவாசை விரதம் இறைவழிபாட்டால் பரிகாரங்களால் இந்த சாபம் நிவர்த்தியாகாது. நான் கூறுவதுபோன்று சாப நிவர்த்திகளைச் செய்யச்சொல். இந்த சாபம் விலகும், வம்ச 
வாரிசுகளைத் தொடராது, பாதிப்பு தராது என்று கூறிவிட்டு சில நடைமுறை நிவர்த்திகளையும், சில பிரார்த்தனைகளையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறிய அனைத்தையும் செய்கின்றேன் என்று கூறிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267